WTC Final TeaBreak: வார்னர் அவுட்… தேநீர் இடைவேளை முடிவில் ஆஸ்திரேலியா 23 ரன்கள்.!
ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் தேநீர் இடைவெளி முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களும், இந்திய அணி 296 ரன்களும் எடுத்தது. இந்திய அணியில் ரஹானே 89 ரன்கள் மற்றும் ஷார்துல் தாக்குர் 51 ரன்களும் எடுத்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இதை எடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது. சிராஜ் வீசிய பந்தில் டேவிட் வார்னர் ஒரு ரன் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். ஆஸ்திரேலிய அணி தற்போது வரை மூன்றாம் நாள் தேநீர் இடைவேளை முடிவில் 23/1 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியா தற்போது 196 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. லபுஸ்சன் 8 ரன்களும், க்வாஜா 13 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.