WTC பைனல்: போராடிய ரஹானே, தாக்குர்… இந்தியா 296 ரன்களுக்கு ஆல் அவுட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் முதல் இன்னிங்சில் இந்தியா 296 ரன்களுக்கு ஆல் அவுட்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 296 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஜடேஜா(48), ரஹானே(89) மற்றும் தாக்குர்(51) ஆகியோர் இந்திய அணியை ஓரளவு சரிவிலிருந்து போராடி மீட்டனர். அதிகபட்சமாக ரஹானே 89 ரன்களும், தாக்குர் 51 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்களும், போலந்து, ஸ்டார்க் மற்றும் க்ரீன் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணியை விட இந்தியா 173 ரன்கள் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 173 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்க்சை தொடங்கும்.