அதிர்ச்சி..! நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு..!
ஜார்கண்டில் நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். நிலக்கரி சரக்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மேலும், பலர் புதையுண்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தன்பாத்தில் இருந்து 21 கி.மீ தொலைவில் உள்ள பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (பி.சி.சி.எல்) இன் போவ்ரா கோலியரி பகுதியில் காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. சிந்திரியில் உள்ள காவல் துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) அபிஷேக் குமாரின் கூற்றுப்படி, மீட்புப் பணியாளர்கள் வெற்றிகரமாக பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து மதிப்பீடு செய்தவுடன், உயிரிழந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கையும், சிக்கி அல்லது காயமடைந்த நபர்களின் எண்ணிக்கையும் தெரிவித்துள்ளார்.