அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார்!

Maitreyan

பாஜகவில் மீண்டும் இணைந்தார் அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன்.

அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், டெல்லியில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.  கடந்தாண்டு அக்டோபரில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், டெல்லியில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் முன்னிலையில் பாஜக இணைந்தார்.

1999-ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மைத்ரேயன், தற்போது மீண்டும் பாஜகவில் தஞ்சமடைந்தார். 1999 முதல் 2000 வரை மாநில தலைவராகவும் பணியாற்றிய இவர், 2000 ஆம் ஆண்டில் பாஜகவிலிருந்து விலகி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.

அதிமுகவில் இருந்தபோது கட்சியின் முக்கிய பொறுப்புகளையும், மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். குறிப்பாக, ஜெயலலிதா தலைமையில் இருக்கும்போது மைத்ரேயனுக்கு மாநிலங்களவை பதவி தொடர்ந்து வழங்கப்பட்ட நிலையில், ஈபிஎஸ் தலைமையேற்ற பிறகு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதன்பின், ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுக மீண்டும் இரண்டாக பிரிந்தபோது, ஒபிஎஸ் அணியில் பயணித்தார். பின்னர் ஓபிஎஸ் தரப்புக்கு தாவினார்.  இதுபோன்று தொடர்ந்து, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்புக்கு மாறி மாறி ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி அதிமுகவில் இருந்து மைத்ரேயனை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில், தற்போது மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார் மைத்ரேயன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin
smriti mandhana records