மருத்துவமனையில் தீ விபத்து..! 20 பச்சிளங்குழந்தைகள் மீட்பு..!
டெல்லியில் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி வைஷாலி காலனியில் உள்ள பிறந்த குழந்தைகளுக்கான மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து மருத்துவமனையிலிருந்து தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, 9 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் இருந்து 20 பச்சிளங்குழந்தைகளை மீட்டு அருகிலுள்ள வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.