ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி கட்டிடம் இடிப்பு..! என்ன காரணம்..?
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிப்பு.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில், 288 பேர் உயிரிழந்தனர். பல காயமடைந்தனர். இந்த நிலையில்,இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலத்தை அங்குள்ள பள்ளி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்ததால் பள்ளிக்கு வர மாணவர்கள் அச்சம் தெரிவிப்பதாக கூறப்படும் நிலையில், இந்த கட்டிடம் பிடிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 19ம் தேதிக்குள் இடித்த இடத்தில் புதிய வகுப்பறை கட்டி முடிக்கப்படும் ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.