குழந்தை பேறு ஒரு பெரிய விஷயமே இல்லை..! மனுஸ்மிருதியை ஒருமுறை படியுங்கள் – குஜராத் உயர்நீதிமன்றம்
குழந்தை பேறு ஒரு பெரிய விஷயம் கிடையாது என குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நிலையில், அவர் தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் கருவை கலைக்க அனுமதி அளிக்குமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தற்போது 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு பாருங்கள் அந்த காலத்தில் திருமணம் செய்ய அதிகபட்ச வயது 14 முதல் 15 வயது தான். 17 வயதிற்கு முன்பதாகவே அவர்களுக்கு குழந்தை பிறந்துவிடும். எனவே குழந்தை பேறு ஒரு பெரிய விஷயம் கிடையாது. மனுஸ்மிருதியை ஒரு முறை படித்துப் பார்க்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி மருத்துவர்கள் சிறுமிக்கு மனநல மற்றும் உடல்நல பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூன் 15-ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்துள்ள நிலையில், அறிக்கை தாக்கல் செய்த பின் இது குறித்து தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.