8 ஜிபி RAM…27,000-க்கு ஸ்லிம்மான Infinix லேப்டாப்.! இன்று முதல் அதிரடி ஆஃபருடன் விற்பனைக்கு..!

INBookX2Slim

இன்பினிக்ஸின் இன்புக் எக்ஸ்2 (INBook X2) ஸ்லிம் லேப்டாப் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமான இன்பினிக்ஸ் (Infinix) அதன் மலிவு விலை இன்புக் எக்ஸ்2 (INBook X2) ஸ்லிம் லேப்டாப்பை இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. மாணவர்கள் மற்றும் தொழில் நிபுணர்களை இலக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த லேப்டாப்பை, இன்று முதல் பிளிப்கார்ட் இணையதளம் மூலம் ஆன்லைனில் வாங்கலாம்.

INBookX2Slim
INBookX2Slim [Image Source : flipkart]

இந்த இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 (Infinix INBook X2) ஸ்லிம் லேப்டாப்பின் விற்பனை, மதியம் 12 மணி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது ரூ.26,990 என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதன்படி, இன்று விற்பனைக்கு வந்துள்ள இந்த இன்ஃபனிக்ஸ் இன்புக் எக்ஸ்2 ஸ்லிம் லேப்டாப்பின் அம்சங்களை கீழே காணலாம்.

INBookX2Slim
INBookX2Slim [Image Source : flipkart]

இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 ஸ்லிம் லேப்டாப் 1080×1920 பிக்சல் தெளிவுடன் 14 இன்ச் FHD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும், இது 300 நீட்ஸ் வரை பிரைட்னஸ் மற்றும் 100% ஆர்ஜிபி (RGB) நிறங்களை வெளிப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் நாம் பார்க்கும் வீடியோவின் நிறம் ஒழுங்குபடுத்தப்பட்டு தெளிவாக காட்டப்படும்.

INBookX2Slim
INBookX2Slim [Image Source : flipkart]

குறைந்தபட்சம் 1.24 கிலோ எடை கொண்ட இந்த லேப்டாப் 50 வாட் பேட்டரி மற்றும் 65 வாட் சி-டைப் (C-Type) பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. இதனால் பயனர்கள் அதிக நேரம் இந்த லேப்டாப்பில் வீடியோ மற்றும் இணையதள சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் வீடியோ கால் செய்வதற்கு HD வெப்கேம்மும் உள்ளது.

INBookX2Slim
INBookX2Slim [Image Source : flipkart]

இந்த இன்புக் எக்ஸ்2 லேப்டாப், 11th ஜென் இன்டெல் கோர் ஐ7 (11th generation Intel Core) பிராசஸர் மூலம் இயங்கக்கூடிய இந்த லேப்டாப் விண்டோஸ் 11 உடன் விற்பனைக்கு வருகிறது. சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களில் வரும் இன்புக் எக்ஸ்2, அதன் அம்சங்களுக்கு ஏற்ப விலையில் மாறுபாடு கொண்டுள்ளது.

INBookX2Slim
INBookX2Slim [Image Source : flipkart]
அதன்படி, இன்புக் எக்ஸ்2 விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது,

i3 உடன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ்      : ரூ.29,990
i3 உடன் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ்      : ரூ 31,990
i5 உடன் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ்    : ரூ.38,990
i5 உடன் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ்        : ரூ 40,990
i7 உடன் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ்    : ரூ 48,990
i7 உடன் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ்        : ரூ 50,990

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்