எச்சரிக்கை..! அனுமதியின்றி பேனர், பதாகைகள் வைத்தால் ஓராண்டு சிறை மற்றும் ரூ.25,000 அபராதம்.!

AdvertisingBanner

அனுமதியின்றி பேனர், பதாகைகள் வைத்தால் ஓராண்டு சிறை மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை, ரூ.5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

விதிகளை மீறி ராட்சத விளம்பர பலகைகள் வைத்தால் நிறுவனம், தனிநபர், நிலம், கட்டட உரிமையாளருக்கு 3 வருட சிறை அல்லது ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்

உரிமம் பெறாமல் விளம்பர பலகை வைக்க முடியாது. உரிமக்காலம் முடிந்ததும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். விபத்து நடந்தால், பேனர், விளம்பர பலகை வைத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழப்போ, காயமோ ஏற்பட்டால் அதற்குரிய இழப்பீட்டை பேனர் வைப்பவர்களோ, நிறுவனம், தனிநபர், நிலம், கட்டட உரிமையாளர்களோ தரவேண்டும் என நகராட்சி நிர்வாகத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, கோவையில் விளம்பர பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்