மணிப்பூர் கலவரம்… மத்திய அரசு ரூ.101.75 கோடி ஒதுக்கீடு.!
மணிப்பூர் மாநில கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காக மத்திய அரசு ரூ.101.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மணிப்பூரில் கடந்த மாதம் மே 3 ஆம் தேதி பட்டியலின பழங்குடி (எஸ்டி) அந்தஸ்து கோரி மெய்டேய் சமூகத்தின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடித்த கலவரத்தில் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் கலவரம் கட்டுக்குள் இருப்பதாகவும் அமைதி திரும்பியதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் மத்திய அரசு ரூ.101.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அமித்ஷா சமீபத்தில் நிலவரம் குறித்து அறிய மணிப்பூருக்கு பயணம் செய்திருந்தார், அப்போது நிவாரணம் அறிவிப்பது குறித்த ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மணிப்பூர் கலவரத்திற்கு பிறகு அங்கு இதுவரை மொத்தம் 896 ஆயுதங்கள், 11,763 தோட்டாக்கள் மற்றும் பல்வேறு வகையான 200 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை ஆலோசகர் தெரிவித்தார்.