WTC Final: ஹெட், ஸ்மித் அதிரடி சதம்… ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆல் அவுட்.!
இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆல் அவுட்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 327/3 ரன்கள் குவிந்திருந்தது. டிராவிஸ் ஹெட் 146* ரன்கள் மற்றும் ஸ்மித் 95* ரன்களுடனும் இன்றைய 2ஆம் நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலியா இன்று தொடர்ந்தது.
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஸ்மித் சதமடித்தார். வலுவான நிலையில் இருந்து பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஹெட் 163 ரன்களுக்கு ஆட்டமிழக்க அதன்பின் களமிறங்கிய க்ரீன் 6 ரன்கள் எடுத்தும் விக்கெட்டை இழந்தது. பொறுப்புடன் விளையாடி சதமடித்த ஸ்மித்தும்(121) போல்ட் ஆகி தனது விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து கேரி கொஞ்சம் அதிரடியாக விளையாடி 48 ரன்கள் குவித்தார், பின் விக்கெட்டை இழந்து வெளியேறினார். முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா தரப்பில் சிராஜ் 4 விக்கெட்களும், ஷமி மற்றும் தாக்குர் தலா 2 விக்கெட்களும் ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.