விலகிய ஸ்மித்…செம கடுப்பில் பந்தை எரிந்த சிராஜ்…வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

Steve Smith

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்ரேலியா அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்த நிலையில், இந்த போட்டியில் ஸ்மித் அதிரடியாக சதம் விளாசி இருந்தார்.

மேலும், இரண்டாவது நாளின் முதல் ஓவரில் ஸ்மித் ஒரு பவுண்டரி விளாசுவார் என்று இந்தியா எதிர்பார்க்கவில்லை. அன்றைய முதல் ஓவரை சிராஜ் வீசினார். ஸ்மித் தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்து சதத்தை எட்டினார்.

இந்த 4 ரன்கள் தொடர்ந்து போனதால் சற்று  சிராஜ் எரிச்சலடைந்தார். பின்னர் ஸ்மித் பேட்டிங் செய்யும்போது பந்தை சிராஜ் வீச இருந்த வேளையில், கடைசி நேரத்தில் ஸ்மித் கிரீஸிலிருந்து வெளியேறினார். இதனால் ஆத்திரமடைந்த சிராஜ் பந்து வீசி ஸ்டம்பில் அடித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்