கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்,தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரம் அடைந்து வருவதையடுத்து கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்ததில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 14 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மேலும், தேனி மாவட்டம் பெரியார், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் தலா 12 செ.மீட்டரும், நீலகிரி மாவட்டம் நடுவட்டம், கோவை மாவட்டம் வால்பாறையில் தலா 10 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளன.
சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.