WTC Final LUNCH: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்… விக்கெட்களை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா! 422/7 ரன்கள் குவிப்பு.!
இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத ஆஸ்திரேலியா விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. நேற்று முதல் நாள் ஆட்டநேரமுடிவில் வலுவான நிலையில் இருந்து பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஹெட் 163 ரன்களுக்கு ஆட்டமிழக்க அதன்பின் களமிறங்கிய க்ரீன் 6 ரன்கள் எடுத்தும் விக்கெட்டை இழந்தனர்.
பொறுப்புடன் விளையாடிய ஸ்மித் டெஸ்டில் தனது 31 வது சதத்தை நிறைவு செய்தார். இதையடுத்து ஸ்மித்தும் போல்ட் ஆகி தனது விக்கெட்டை இழந்தார். ஸ்மித் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். 2ஆம் நாள் உணவு இடைவேளை முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 422 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.
அலெக்ஸ் கேரி 22* ரன்கள் மற்றும் கம்மின்ஸ் 2* ரன்கள் எடுத்து களத்தில் நிற்கின்றனர். இந்திய அணி சார்பில் ஷமி, சிராஜ் மற்றும் தாக்குர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளனர்.