இது கனடாவுக்கு நல்லது அல்ல… வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர்.!

jaisankar Canada

கனடாவின் அணிவகுப்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையைக் கொண்டாடியதாகக் கூறப்படும் நிலையில், இது கனடாவுக்கு நல்லதல்ல என ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

கனடாவில் காலிஸ்தானி ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படும், கனடாவின் பிராம்ப்டன் அணிவகுப்பில் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைக் காட்டும் வகையில் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.

இந்த வீடியோ ஜூன் 4ஆம் தேதி நடந்த பிராம்ப்டன் அணிவகுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அக்டோபர் 31, 1984 அன்று, அவரது இல்லத்தில் இரு சீக்கிய  பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். கனடா அணிவகுப்பில் இந்திரா காந்தியின் படுகொலையை கொண்டாடியதாக வெளியான வீடியோவை அடுத்து, இது இந்தியா மற்றும் கனடா உறவுகளுக்கு நல்லதல்ல என்று கூறினார்.

மேலும் பிரிவினைவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும், வன்முறையை ஆதரிப்பவர்களுக்கும் கனடா இடம் அளிப்பது பற்றியும் தெரிவித்த ஜெய்சங்கர் இது இரு நாட்டு உறவுகளுக்கும் நல்லதல்ல மற்றும் கனடாவுக்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்