பிரான்சில் கத்திக்குத்து…6 குழந்தைகள் காயம்…2 பேர் நிலை கவலைக்கிடம்.!!
தென்கிழக்கு பிரான்சில் உள்ள அல்பைன் நகரமான அன்னேசியில் உள்ள ஒரு சிறிய விளையாட்டு மைதானத்தில் சிறு குழந்தைகள் குழு விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு மர்ம நபர் ஒருவர் பூங்காவிற்குள் நுழைந்து திடீரென கையில் வைத்திருந்த கத்தியை வைத்து குழந்தைகளை தாக்க தொடங்கியுள்ளார்.
இதில் 6 குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 6 பேரும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், காயமடைந்தவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அமைச்சர் ஜெரால்டு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் தாக்குதல் நடத்தி விட்டு தப்ப முயன்ற நபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவர் வைத்திருந்த கத்தியையும் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.