ராகுல்காந்தி வெளிநாடு செல்லும் போதெல்லாம் இந்தியாவை விமர்சித்து பேசுகிறார்..! ஜெய்சங்கர் கண்டனம்
ராகுல்காந்தி வெளிநாடு செல்லும் போதெல்லாம் இந்தியாவை விமர்சித்து பேசுவதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் எம்பி ராகுல்காந்தி வெளிநாடு செல்லும் போதெல்லாம் உள்நாட்டில் அரசியல் குறித்து விமர்ச்சிப்பதும், தேசிய அரசியலை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்வதை வாடிக்கையாக கொண்டவர் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், ஜனநாயகம் பலவீனமடைந்து வருகிறது என்று ராகுகாந்தி கூறியதற்கு மறுப்பு தெரிவித்து, நமது இந்தியா ஜனநாயக நாடு என்பதால்தான் ஆட்சி மாற்றம் என்பது நடைபெறுகிறது. ஜனநாயகம் என்பது இல்லையென்றால் ஒரே கட்சிதான் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறியுள்ளார்.
மேலும், ராகுல்காந்தி இந்தியாவில் பேசுவது குறித்து எனக்கு கவலை இல்லை, ஆனால் இந்தியாவை பற்றி வெளிநாட்டில் பேசுவது தவறு என்று அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டியளித்துள்ளார்.