இரவில் தூக்கமே இல்லையா…அப்போ உங்களுக்காக 6 வழிகள்…!

இரவு ஒரு நல்ல தூக்கம் இல்லாமல் அவதிப்படும் மக்கள் இங்கே ஏராளம். குறிப்பாக, மொபைல் போன் கையில் இருந்தாலே போதும், தூக்கம் தன்னால் போய்விடும். அது தெரிஞ்சும் நீங்க அத உபயோக படுத்திறீங்க என்றால், உங்கள் உடலுக்கு தூக்கம் இன்மை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

sleep
sleep [Imagesource : Representative]

சில முக்கிய காரணங்கள் ஒரு நல்ல இரவு தூக்கத்தை கெடுக்கும். வேலை அழுத்தம் மற்றும் குடும்பப் பொறுப்புகள் முதல் நோய்கள் வரை. தரமான தூக்கம் சில நேரங்களில் உங்கள் நாளை சிறப்பாக மாற்றும். இருப்பினும், சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கும் பழக்கங்களை நீங்கள் பின்பற்றலாம். இந்த எளிய உதவிக்குறிப்புகளுடன் தொடங்குங்கள்.

time sleep
time sleep [Imagesource : Representative]

1. தூக்கத்திற்கான நேரத்தை குறிக்கவும்

தூக்கத்திற்காக எட்டு மணி நேரத்திற்கு மேல் ஒதுக்குங்கள். வயதுக்கு வந்த இளைஞர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட தூக்கத்தின் அளவு குறைந்தது ஏழு மணிநேரம் ஆகும். பெரும்பாலான மக்கள் நன்றாக ஓய்வெடுக்க எட்டு மணி நேரத்திற்கு மேல் படுக்கையில் இருக்க வேண்டியதில்லை. எப்போதும், தூங்கும் போழுது  வார இறுதி நாட்கள் உட்பட ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் எழுந்திருங்கள்.

sleep
sleep [Imagesource : Representative]

படுக்கையில் படுத்தும் 20 நிமிடங்களுக்குள் நீங்கள் தூங்கவில்லை என்றால், உங்கள் படுக்கையறையை விட்டு வெளியேறி ஓய்வெடுக்க ஏதாவது செய்யுங்கள், இனிமையான இசையைப் கேளுங்கள், பின்னர் நீங்கள் சோர்வாக இருக்கும்போது மீண்டும் படுக்கைக்குச் செல்லுங்கள்.

light off sleep
light off sleep [Imagesource : Representative]

2. அமைதியான சூழலை உருவாக்குங்கள்

உங்கள் அறையை குளிர்ச்சியாகவும், இருட்டாகவும், அமைதியாகவும் வைத்திருங்கள். இரவு நேரங்களில் வெளிச்சமாக இருந்தால் தூங்கவதற்கு மிகவும் சவாலாக இருக்கும். தூங்குவதற்கு முன், குளிப்பது அல்லது புத்தகம் படிப்பது போன்ற அமைதியான செயல்களைச் செய்வது நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.

night food and sleep
night food and sleep [Imagesource : Representative]

3. இரவு உணவில் கவனம்:

செலுத்துங்கள்நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் மற்றும் குடிக்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துவது அவசியம். பசியுடன் தூங்க கூடாது குறிப்பாக, படுக்கைக்கு இரண்டு மணி நேரத்திற்குள் அதிக உணவை உட்கொள்வதை தவிர்க்கவும்.

alcohol addiction - drunk businessman holding a glass of whiskey
alcohol addiction [Imagesource : Representative]

தூங்க செல்வதற்கு முன்பு சிகரெட் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றலிந்து விலகி இருக்க வேண்டும். மதுபானம் அருந்திவிட்டு தூங்கினால் முதலில் உங்களுக்கு தூக்கம் வரும். ஆனால், அது இரவில் தூக்கத்தை கெடுத்துவிடும்.

morning sleep
morning sleep [Imagesource : Representative]

4. பகல் நேர தூக்கத்தை தவிர்க்கவும்

நீண்ட பகல் தூக்கம் இரவு தூக்கத்தை கெடுத்துவிடும், ஒரு மணி நேரத்திற்கு மேல் தூங்குவதையும் அல்லது பகலில் தாமதமாக தூங்குவதை தவிர்க்கவும். இருப்பினும், நீங்கள் இரவு நேரங்களில் வேலை செய்பவராக இருந்தால், அலுப்பை போக்குவதற்கு பகல் நேரங்களில் தூங்க வேண்டியிருக்கும்.

5. கவலைகளை குறைக்கவும்

தீர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் மனதில் உள்ளதை எழுதி வைத்து, அதற்கு என்ன தீர்வு காணலாம் என சிந்தியுங்கள். இது உங்கள் மனதில் உள்ள கவலையை போக்கும். தியானம் கூட கவலையை குறைக்கும்.

work and sleep
work and sleep [Imagesource : Representative]

6. சிறிய வேலைபாடு

உங்கள் உடல் செயல்பாடு சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கும். தூங்கும் முன், ஏதாவது வேலை அல்லது உடற்பயிச்சி மேற்கொண்டால், சோர்வை உண்டாகும். இதனால், தூக்கம் நன்றாக வரும். உதாரணத்திற்கு வெளியில் நேரத்தை செலவிடுவதும் பயனுள்ளதாக இருக்கும். இது உங்கள் உடல் அலுப்பை ஏற்படுத்தி நிம்மதி தூக்கத்தை உண்டாக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Dhanush - Nayanthara
Shardul Takur
Rain Update
nayanthara and dhanush
PM Modi - Yogi Adhithyanath
sabarimalai (1)