செம கடுப்பாகி தனது அணி வீரரை மோசமான வார்த்தையில் பேசிய ரோஹித்…வைரலாகும் வீடியோ.!!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய நிலையில், போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது . இதன் படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி காலை உணவு இடைவேளை வரை மூன்று விக்கெட்டுகளை இழந்து விளையாடிய து. விக்கெட்டை பறி கொடுக்காமல் ஹெட் சதம் அடித்தும் ஸ்மித் அரைசதம் அடித்தும் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
மேலும், இந்திய அணி பவுலர்கள் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் திணறினர். இதற்கிடையில், நேற்று போட்டியின் நடுவே, ரோஹித் ஷர்மா தனது அமைதியை இழந்து சக வீரர்களிடம் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
WATCH: India skipper @ImRo45 loses cool at team on opening day of WTC Final 2023#RohitSharma #WTCFinal2023 #WTCFinal #WTC23 #INDvsAUS #Cricket pic.twitter.com/bQ4cJrSXLL
— Sportsliveresult (@Sportslive91091) June 8, 2023
அதற்கான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ரோஹித் சர்மா ” ஜடேஜா பந்து வீசும்போது அதற்கு பின்னால் நின்று கொண்டிருந்த ரோஹித் தனது அணி வீரர்களில் ஒருவரை ஹிந்தியில் ‘க்யா கர் ரஹே ஹோ *********’ எனும் மோசமான வார்த்தைகளைப் பேசியதாக அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும், முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. களத்தில் ஹெட் 146* ரன்களுடனும், ஸ்மித் 95* ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். விரைவில் இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.