இந்த புகாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – விசிக எம்.பி. ரவிக்குமார் ட்வீட்

ravikumar mp

உயர் அதிகாரிகள் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறார்கள் என்பது கவலையளிக்கும் ஒரு குற்றச்சாட்டு என விசிக எம்.பி. ரவிக்குமார் ட்வீட்.

தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலாளராக உள்ள ககன்தீப்சிங் பேடி மீது  சாதி ரீதியாக இழுவுபடுத்தியதாக   ஈரோடு கூடுதல் ஆட்சியர் மணீஸ் நரவனே பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து, விசிக எம்.பி. ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் மணீஸ் நரவனே, தற்போதைய சுகாதாரத் துறை செயலாளர் திரு.ககன்தீப்சிங் பேடி பற்றி கூறியிருக்கும் புகார் அதிர்ச்சி அளிக்கிறது.திரு பேடி கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் நான் MLA ஆக இருந்தேன்.அவர் பாகுபாடு காட்டி நான் பார்த்ததில்லை.

அவர்மீது யாரும் இப்படி புகார் சொல்லி நான் கேட்டதில்லை.உயர் அதிகாரிகள் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறார்கள் என்பது கவலையளிக்கும் ஒரு குற்றச்சாட்டு.பொது வெளியில் ஒரு IAS அதிகாரி முன்வைத்துள்ள இந்தப் புகாரை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்