நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாகும் ஜோதிகா..? “தளபதி 68” படத்தின் வெறித்தனமான அப்டேட்.!!
நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தன்னுடைய 68-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக தளபதி 68 என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். மேலும், லியோ திரைப்படம் இன்னும் வெளியாவதற்குள்ளே தளபதி68 படத்திற்கான சில அப்டேட் குறித்த தகவல்களும் அவ்வபோது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக படத்தின் தலைப்பு CSK என பரவி வந்தது.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க நடிகை பிரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. அந்த வகையில் தற்பொழுது, அதனை தொடர்ந்து ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.
அது என்னவென்றால், தளபதி 68 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகையான ஜோதிகா நடிக்க உள்ளதாக தகவல்கள் கசந்துள்ளது. கடைசியாக ஜோதிகா விஜய்யுடன் திருமலை திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
மேலும், ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்திலும் ஜோதிகா தான் நித்யா மேனன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். ஆனால், சில காரணங்களால் ஜோதிகாவால் விஜயுடன் நடிக்க முடியாமல் போனது. அதனை தொடர்ந்து, தற்போது தளபதி 68 படத்தில் அவர் நடிக்க உள்ளதாக வெளிவந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் ஜோதிகா திருமலை படம் மட்டுமின்றி குஷி திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.