பரபரப்பு..சென்னை ஏர்போர்ட்டில் துப்பாக்கி குண்டுடன் வந்த இளைஞர்…மடக்கி பிடித்த போலீஸ்.!!
சென்னை விமான நிலையத்தில் இருந்து புனேவிற்கு செல்லும் பயணிகளின் பைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது சோதனை செய்தபோது பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய பையில் துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவருடைய பெயர் விஷால் சிங் என்பது தெரிய வந்துள்ளது. பின், போலீசார் அவரிடம் எதற்காக துப்பாக்கி குண்டுகள் வைத்துளீர்கள்..? என கேட்டு விசாரணை செய்துள்ளார்கள்.
அதற்கு விஷால் சிங் “தன்னுடைய தந்தை சி.ஆர்.பி.எப்.பில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் என்றும், தான் தவறுதலாக தன்னுடைய தந்தையின் பையை மாற்றி எடுத்து வந்துவிட்டேன் என கூறியுள்ளார். இதனையடுத்து, போலீசார் அவருடைய தந்தையை தொடர்பு கொண்டு பேசி துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்துவிட்டு விஷால் சிங்கை அனுப்பிவைத்தனர்.