மணீஷ் சிசோடியாவை மிஸ் பண்ணுகிறேன் – கண்கலங்கிய டெல்லி முதல்வர்..!
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மணீஷ் சிசோடியாவை மிஸ் பண்ணுவதாக டெல்லி முதல்வர் கண்கலங்கியுள்ளார்.
டெல்லியில் கல்வித்துறை சார்ந்த நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்வால் அவர்கள் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மணீஷ் சிசோடியாவை நினைவு கூர்ந்து கண்கலங்கியுள்ளார்.
அவர் பேசுகையில், அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்பதே சிசோடியாவின் கனவு. சிறந்த கல்வியை வழங்கியதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என கூறி அவரை மிஸ் செய்வதாகவும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.