10 பேர் கொல்லப்பட்ட வழக்கு: 90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை.!

UP Sentenced To Life For Killing 10 Dalits

உத்தரப்பிரதேசம்: 42 ஆண்டுகளுக்கு முன்பு தலித் சமூகத்தைச் சேர்ந்த 10 பேரைக் கொலை செய்த வழக்கில் 90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா பிரிவின் ஃபிரோசாபாத் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

up murder case
up murder case [Image -ndtv]

மேலும், அவருக்கு 55,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதம் கட்டத் தவறினால், ஆயுள் தண்டனையுடன் 13 மாதங்கள் சேர்த்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷிகோஹாபாத் காவல் நிலையப் பகுதியில் உள்ள சத்பூர் என்ற கிராமத்தில் 1981 டிசம்பரில் இந்தக் கொலைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து மெயின்புரி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அக்டோபர் 1989-ல் ஃபிரோசாபாத் மாவட்டம் உருவான பிறகு, ஷிகோஹாபாத் ஃபிரோசாபாத் பகுதியாக மாறியது. இருப்பினும், இந்த வழக்கின் விசாரணை மெயின்புரி நீதிமன்றத்தில் தொடர்ந்தது நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 2021-ல், இந்த வழக்கு ஃபிரோசாபாத் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், அதற்குள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஒன்பது பேர் இறந்துவிட்டனர். இதனால், எஞ்சியிருக்கும் ஒரே குற்றவாளியான கங்கா தயாளுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி ஹர்வீர் சிங் புதன்கிழமை தீர்ப்பளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்