Today’s Live: புதுச்சேரி மாநில காவல்துறை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியானது..!
தேர்வு முடிவுகள்:
புதுச்சேரி மாநில காவல்துறையில் காலியாக உள்ள 253 காவலர்கள் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், போலீஸ் தலைமையகம் முன்பு ஒட்டபட்டுள்ளது.
மின்கட்டண உயர்வு:
வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும். வணிக, தொழில் அமைப்புகளுக்கு மிக குறைந்த அளவிலேயே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக, தொழில் அமைப்புகளுக்கு மட்டும் யூனிட் ஒன்றுக்கு 13-21 பைசா வரை மின்கட்டணம் உயரும் என மின்சார வாரியம் என தெரிவித்துள்ளது.
பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை:
பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற 9.29 லட்சம் மாணவர்கள் பட்டமளிப்புக்காக காத்திருக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. மற்ற 12 பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுக்குழு தீர்மான வழக்கு இன்று விசாரணை:
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் செல்லும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.
வலுவடைந்ததது ‘பிபோர்ஜோய்’
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘பிபோர்ஜோய்’ மிக தீவிர புயலாக வலுவடைந்ததது. அடுத்த 3 நாட்களில் வடக்கு நோக்கி நகரும்.
இன்றயை பெட்ரோல், டீசல் விலை:
383-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் சென்னையில் இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் விலை குறையாத காரணத்தினால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்:
- புழல் ஏரியில் நீர்இருப்பு 2173 மில்லியன் கனஅடியாக உள்ளது, நீர்வரத்து 200 கனஅடியாக உள்ளது, 159 கனஅடி நீர் வெளியேற்றம்.
- சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 636 மில்லியன் கனஅடியாக உள்ளது, 200 கனஅடி நீர் வெளியேற்றம்.
- கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 449 மில்லியன் கனஅடியாக உள்ளது, வினாடிக்கு 14 கனஅடி நீர் வெளியேற்றம்.