ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து…! 6 பேர் உயிரிழந்ததாக தகவல்..!
ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் சந்திப்பு பகுதியில் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல்.
ஒடிசாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற அகோரமான ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர். இந்த சோகமே இன்னும் மறையாத நிலையில், மீண்டும் ஒரு ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் சந்திப்பு பகுதியில் ரயில்வே பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மழை பெய்ததால் ரயில் பெட்டிக்கு கீழே ஒதுங்கியுள்ளனர்; அந்த நேரத்தில் ரயில் புறப்பட்டதால் அவர்கள் மீது சக்கரம் ஏறி உயிரிழந்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளனர்.