TEA Break Day1: டிராவிஸ் ஹெட் அரைசதம்… ஆஸ்திரேலியா அற்புதமான பேட்டிங், 170/3 ரன்கள் குவிப்பு.!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி தேனீர் இடைவேளை முடிவில் 170/3 ரன்கள் குவிப்பு.
இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியா நிதானமாக விளையாடி வருகிறது. உணவு இடைவேளைக்கு பிறகு விக்கெட் எதுவும் இழக்காமல் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் இருவரும் பொறுமையாக விளையாடி ரன்கள் குவித்து வருகின்றனர்.
டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவருக்கு துணையாக ஸ்மித்தும் சேர்ந்து அணிக்காக 85 ரன்கள் குவித்துள்ளனர். தேனீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 51 ஒவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.
டிராவிஸ் ஹெட் 60* ரன்களும், ஸ்மித் 33* ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர். இந்தியா சார்பில் ஷமி, சிராஜ் மற்றும் தாக்குர் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.