மிக தீவிர புயலாக மாறியது ‘பிப்பர்ஜாய்’..! வானிலை மையம் தகவல்..!
அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள பிப்பர்ஜாய் புயல், மிக தீவிர புயலாக மாறி வலுப்பெற்றுள்ளது.
நேற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்றது. ‘பிப்பர்ஜாய்’ என்று அழைக்கப்படும் இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து அரபிக்கடலில் காலை தீவிர புயலாக வலுப்பெற்றது.
தீவிர புயலாக வலுப்பெற்ற பிப்பர்ஜாய் புயல் கோவாவிலிருந்து மேற்கு-தென்மேற்கு திசையில் 880 கிலோமீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து தென்மேற்கே சுமார் 990 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள பிப்பர்ஜாய் புயல், மிக தீவிர புயலாக மாறி வலுப்பெற்றுள்ளது. கோவாவுக்கு 860கிமீ மேற்கு-தென்மேற்கில் புயல் மையம் கொண்டுள்ளதாகவும், இதனால் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.