இரண்டு முறை மிஸ் ஆச்சு..இந்த முறை மிஸ் ஆகாது…ஸ்டெம்பை தெறிக்கவிட்ட ஷமி.!!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது. ஆஸ்ரேலியா அணி பேட்டிங் செய்து வருகிறது. இதுவரை ஆஸ்ரேலியா 3 விக்கெட்கள் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், போட்டியில் நிதானமாக விளையாடி வந்த ஆஸ்ரேலிய வீரர் லபுஸ்சன் ஷமியின் அசத்தலான பந்து வீச்சில் போல்ட் ஆகி 26 ரன்களில் ஆட்டத்தை விட்டு வெளியேறினார். இதற்கு முன்பு லபுஸ்சன் இரண்டு முறை LBW -க்கு ரிவியூ செய்யப்பட்டது.
SHAMMMIIIIIII ????
What a delivery to get the wicket of Labuschagne ???? #WTCFinal2023 | #WTCFinal | #INDvsAUS | #shami pic.twitter.com/qFLy9qDPY0— Gøwtham (@Gowthiss) June 7, 2023
ஆனால் இரண்டு முறையுமே அதிர்ஷடவசமாக தப்பித்து ஆட்டத்தை நீடித்தார். இறுதியாக ஷமி இரண்டு முறை மிஸ் ஆச்சு..இந்த முறை மிஸ் ஆகாது என்பது போல லபுஸ்சன்-ஐ போல்ட் செய்து அவரை ஆட்டமிழக்க செய்தார். மேலும் ஷமி 9 ஓவர்கள் பந்து வீசி 21 ரன்கள் கொடுத்துள்ளார். 1 விக்கெட் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bowled him!
Shami strikes after Lunch and gets the wicket of Marnus Labuschagne.
He is bowled for 26 runs.
Live – https://t.co/5dxIJENCjB… #WTC23 pic.twitter.com/SuJv3msjWc
— BCCI (@BCCI) June 7, 2023