ரஷ்யா, சீனாவின் அச்சுறுத்தல்… உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் அமெரிக்கா.!
ரஷ்யா, சீனாவின் விண்வெளி வாகனங்களைக் கண்காணிக்க அமெரிக்கா உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது.
அமெரிக்க விண்வெளியானது சைலண்ட் பார்கர் எனும் உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது. இந்த உளவு செயற்கைகோள் சீன அல்லது ரஷ்ய விண்வெளி வாகனங்கள் சுற்றுப்பாதையில் உள்ள மற்ற செயற்கைக்கோள் மற்றும் விண்வெளி வாகனங்களை சேதப்படுத்துவதை கண்காணிக்கும் வகையில்விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.
பூமியில் இருந்து குறைந்த சுற்றுப்பாதையில் ஜியோசின்க்ரோனஸ் சுற்றுப்பாதையில் இயங்கும் வகையில் இந்த சைலண்ட் பார்கர் பூமிக்கு மேலே 35,400 கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட இருக்கிறது. ஜூலை மாத இறுதிக்குப் பிறகு சைலண்ட் பார்கர் செயற்கைக்கோள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.