டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – இபிஎஸ்

Edapadi palanisamy

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். 

கடந்த 2022ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4-இல் கிட்டத்தட்ட 10ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்று, கடந்த மார்ச் 2023இல் அதற்கான முடிவு வெளியானது. அதன் பிறகு இன்னும் கலந்தாய்வுக்கு தேர்வானவர்கள் அழைக்கப்பட வில்லை.

இது குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டு இன்னும் கலந்தாய்வு நடத்தபடாமல் இருக்கிறது. இதனால் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலி பணியிடங்கள் தற்போது 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதனால், அரசு பணிகள் தொய்வுடன் நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடஙக்ளை நிரப்ப எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்