பாலியல் வன்முறை வழக்கில் ரிங்கிங் பெல்ஸ் உரிமையாளர் கைது..!
பாலியல் வன்முறை வழக்கில் சிக்க வைத்து பணம் பறிக்க முயன்ற குற்றச்சாட்டில் ரிங்கிங் பெல்ஸ் எனப்படும் உலகின் விலைமலிவாக ஸ்மார்ட் போன் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரீடம் 251 என்ற பெயரில் உலகின் மிக விலை மலிவான ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துவதக அறிவித்து புகழ் பெற்றவர் ரிங்கிங் பெல்ஸ் உரிமையாளர் மோகித் கோயல்.
அவரையும், அவரது உதவியாளர் மற்றும் ஒரு பெண்ணையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஓட்டலில் வைத்து தன்னை 5 பேர் சேர்த்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் கொடுத்ததன் அடிப்படையில் விசாரனை நடைபெற்று வந்துள்ளது.
ஆனால் அதே காலக்கட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் பணம் கேட்டு அந்த பெண் மிரட்டியுள்ளார்.
ரூ.11 கோடி கேட்கப்பட்டு, கடைசியில் ரூ.2.5 கோடிக்கு பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதில் இரண்டாவது தவணையாக ரூ.30 லட்சம் பெற வந்தபோது மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.