ஜெயக்குமார் வழக்கு.. நிராகரிக்க கோரிய மனுவை ஏற்க ஐகோர்ட் மறுப்பு!

jayakumar

ஜெயக்குமார் நஷ்ட ஈடு கோரி தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி உறவினர் கோரிக்கையை ஏற்க மறுப்பு.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நஷ்ட ஈடு கோரிய வழக்கை, நிராகரிக்க கோரிய உறவினர் மகேஷின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தன்னை பற்றிய அவதூறு பரப்பியதற்காக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க கோரி முன்னாள் ஜெயக்குமார் வழக்கு தொடுத்துள்ளார். மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைத்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக நவீன்குமார், மகேஷ் இடையே பிரச்சனை ஏற்பட்டது. மருமகன் நவீன்குமார், அவரது சகோதரர் மகேஷ் என்பவரது பிரச்சனையில் ஜெயக்குமார் தலையிட்டதாக குற்றச்சாட்டப்பட்டது.

இந்த சமயத்தில், தன்னை பற்றிய அவதூறு பரப்பியதற்காக நஷ்ட ஈடு கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி உறவினர் மகேஷ் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்