டீக்கடையில் டீ குடித்துவிட்டு வாக்குவாதம் – 4 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்!
கடையில் பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், 4 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்.
சென்னை படப்பை அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு, அதற்கான பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி உட்பட 4 பெண் காவலர்களை சஸ்பெண்ட் செய்து தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
மேலும் கடையில் இலவசமாக பிரெட் ஆம்லெட், ஜூஸ் கேட்டு தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, ஓட்டுநர் ஜெயமாலா, இரு பெண் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 4 பெண் காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியான நிலையில், தாம்பரம் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.