வீட்டைக் காலி செய்யும் பிரச்சனையில் மோதல்..!
உத்தரப்பிரதேசத்தில் வீட்டைக் காலி செய்யும் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் இருதரப்பினர் கல்வீசித் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஜவுன்பூர் பகுதியில் நேற்று பிற்பகலில் இரு தரப்பினரிடையே வீட்டைக் காலி செய்வது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
அப்போது உருட்டுக் கட்டைகளை எடுத்து வந்த ஒரு தரப்பினர், வீடு ஒன்றின் மீது நீண்ட நேரம் தொடர்ச்சியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இது அங்கிருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஜவுன்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.