தகர்க்கப்பட்ட உக்ரைன் அணை..பெருக்கெடுத்த வெள்ளம்..! அவசரநிலை அறிவிப்பு..!

Ukraine Dam Blown Up

தெற்கு உக்ரைனில் சோவியத் காலத்து அணை தகர்க்கப்பட்டதால் அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு உக்ரைனின் கெர்சன் பகுதியில் நோவா ககோவ்காவில் சோவியத் காலத்து அணை இன்று தகர்க்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், டினிப்ரோ ஆற்றங்கரையில் உள்ள 10 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனைத்தொடர்ந்து, அணையை சுற்றியுள்ள பகுதிகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அணை தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து 885 பேர் வெளியேற்றப்பட்டனர். கெர்சன் பகுதியின் ஆளுநர் ஒலெக்சாண்டர் புரோகுடின், அனைத்து அவசரகால சேவைகளும் மக்களுக்கு வழங்கப்டும் என்று உறுதியளித்துள்ளார். இந்த அணையை ரஷ்ய படைகள் தகர்த்துவிட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தநிலையில், உக்ரைன் இதனை போர்க்குற்றமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

மேலும், நோவா ககோவ்கா அணை தகர்க்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் 8.5 அடி குறைந்துள்ளதாகவும்,  இன்னும் 30 அடி வரை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு வரும் குளிர்ச்சியான நீர் தடைபட்டுள்ளதால், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் பேரழிவு ஏற்படும் என்ற அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்