யாஷிகாவுடன் காதலா..? அந்தர் பல்டி அடித்த அஜித் உறவினர் ரிச்சர்ட்..!!
நடிகை யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்தும் பிரபல நடிகரான ரிச்சர்ட் ரிஷியும் காதலிப்பதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவி வந்தது.
View this post on Instagram
அதற்கு காரணம் என்னவென்றால், யாஷிகா ஆனந்தும் ரிச்சர்ட் ரிஷியும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் மற்றும் முத்தம் கொடுத்த ஒரு புகைப்படமும் தான்.இந்த புகைப்படங்கள் தான் காதல் வதந்திக்கு முக்கிய காரணமே என்று கூறலாம்.
View this post on Instagram
இந்த நிலையில், உண்மையில் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா..? அல்லது நண்பர்களா.? என கேள்விகள் எழும்பி வந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ரிச்சர்ட் ரிஷி விளக்கம் கொடுத்துள்ளார்.
View this post on Instagram
இது குறித்து பேசிய ரிச்சர்ட் ரிஷி ” நானும் யாஷிகாவும் காதலிக்கவில்லை. நாங்கள் இருவரும் நண்பர்கள் தான். இப்போது எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் நாங்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறோம். அப்போது எடுத்து தான் இந்த புகைப்படங்கள்” என விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் ரிச்சர்ட் ரிஷி நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.