மும்பை தொடர் மரணங்கள்.! விடுதி அறையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.! காவலாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.!
மும்பை மகளிர் விடுதியில் இளம்பெண் தற்கொலை. அதே விடுதி காவலாளியும் தற்கொலை செய்துகொண்டார்.
அண்மையில் மும்பையில் பெண்கள் தங்கும் விடுதியில் 18 வயது இளம் பெண் தனது அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கை மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
18 வயது இளம்பெண் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலையில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரிக்க இளம்பெண் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில், அதே விடுதியை சேர்ந்த காவலாளி பிரகாஷ் கானோஜா என்பவர் விடுதி இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலைகளை தொடர்ந்து உடலை கைப்பற்றி இந்த இரு உயிரிழப்புகளுக்கும் சம்பந்தம் உள்ளதா என மும்பை போலீசார் தீவிரமாக விசாரணைத்து வருகின்றனர். ஏற்கனவே பிரகாஷின் மீது காவல்துறைக்கு சந்தேகம் இருந்ததாக தெரிகிறது. இந்த சந்தேகத்தை அடுத்ததான் பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தும் இளம்பெண்ணின் பிரேத பரிசோதனை விவரங்கள் இன்று கிடைக்கும் என கூறப்படுகிறது அதனை அடுத்து தான் அடுத்த கட்ட விசாரணைகள் ஆரம்பமாகும் மும்பை டி.சி.பி பிரவீன் முண்டே செய்தியாளர்களிடம் கூறினார்.