அமெரிக்க பள்ளி பட்டமளிப்பு விழாவில் பயங்கர துப்பாக்கி சூடு.! 7 பேர் சுட்டு கொலை.!
அமெரிக்காவில் பள்ளி பட்டமளிப்பு விழாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா காமன்வெல் பல்கலைக்கழக வளாகத்தில் ஓர் பள்ளியில் உயர்நிலைப்பள்ளி பட்டமளிப்பு விழா நடைபெற்றது அந்த சமயம் திடீரென துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டன.
திடீரென நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளன. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சந்தேகத்தின் பெயரில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடுகள் நடப்பது அதுவும் பள்ளி வளாகத்திற்குள் நடப்பது தற்போது அதிகமாகி கொண்டு இருக்கிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்பப்படுகிறது.