10 மாணவர்களுக்கு டிசி கொடுத்த விவகாரம் – விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் : மாநகராட்சி ஆணையர்
கோவை மாநகராட்சி பள்ளியில் 10 மாணவர்களுக்கு டிசி கொடுத்த விவகாரத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கோவை ஒக்கிலியர் காலனி மாநகராட்சி பள்ளியில் தேர்ச்சி விகிதத்தை கருத்தில் கொண்டு 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 10 பேருக்கு டிசி கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து பள்ளி தரப்பில் பெற்றோரை அழைத்து பேசிய பின்பு தான் மாற்று சான்றிதழ் வழங்கப்பட்டது என்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.