தொழிலதிபர்களுடன் பேசுவதாலேயே முதலீடு வந்துவிடாது – ஆளுநர் சர்ச்சை பேச்சு

RN RAVI

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்த ஆளுநரின் கருத்தால் சர்ச்சை.

நீலகிரி: உதகையில் தமிழ்நாடு மாநில, தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த துணைவேந்தர்கள் மாநாடு நேற்று உதகையில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்என் ரவி தலைமையில் தொடங்கியது. அதில், தமிழக ஆளுநர் ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அப்போது அந்த விழாவில் பேசிய ஆளுநர் ரவி, தமிழக கல்வி முறையில் மாற்றம் தேவை என குறிப்பிட்டார்.

மேலும் இங்குள்ள இளைஞர்கள் அவர்கள் படித்த படிப்புக்கேற்ற வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள் எனவும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழம் நல்ல  நிலையில் இருந்தாலும், தொடர் சரிவையே சந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும் அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டது சுட்டிக்காட்டி பேசிய ஆளுநர் ரவி, முதல்வர் ஆண்மையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காக வெளிநாடு சென்றிருந்தார்.

அடுத்த ஆண்டு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. நாம் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதாலும், தொழிலதிபர்களிடம் பேசுவதாலோ அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்யப் போவதில்லை, கேட்பதாலோ, அவர்களுடன் பேசுவதாலோ முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என குறிப்பிட்டார். தொழில் செய்வதற்கு இங்கு ஏற்ற இடத்தை அமைத்து தந்தால் மட்டுமே அவர்கள் முதலீடுகளை செய்ய வருவார்கள் எனவும் கூறியுள்ளார்.

உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சுற்றுசூழல் அமைப்பை உருவாக்க வேண்டும். திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே அதற்கான சிறந்த வழி எனவும் கூறினார். மீண்டும் மீண்டும் தமிழக அரசை சீண்டுகிறாரா ஆளுநர் என கேள்வி எழுந்துள்ளது, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்த ஆளுநரின் கருத்தால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்