பிடிபட்ட அரிசி கொம்பன்.! பழங்குடியினர் திடீர் போராட்டம்.!
அரிசி கொம்பன் யானையை கேரள பகுதிக்குள் விட வேண்டும் என பழங்குடியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, பின்னர் தமிழக வனப்பகுதிக்குள் விடப்பட்ட அரிக்கொம்பன் எனப்படும் அரிசிக்கொம்பன் யானை தமிழக எல்லைக்குள் புகுந்து தேனி, கம்பம் பகுதியில் அட்டகாசம் செய்து வந்தது.
இந்த அரிசி கொம்பனை மீண்டும் பிடித்து வனப்பகுதிக்குள் விட வனத்துறை முயன்று அண்மையில் மயக்க மருந்து கொடுத்து பிடித்து கும்கி யானை உதவியுடன் வாகனத்தில் ஏற்றி கோதையாறு பகுதியில் விடப்பட்டான் அரிசி கொம்பன்.
இந்நிலையில், அரிசி கொம்பனை மீண்டும் கேரள மாநிலம் சின்ன கானல் பகுதிக்கு கொண்டு வரவேண்டும் என பூப்பாறை பகுதி பழங்குடியின மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.