பெண்களின் அரை நிர்வாணத்தை ஆபாசமாக கருதக்கூடாது..! கேரள உயர்நீதிமன்றம்
பெண்களின் அரை நிர்வாண உடலை ஆபாசமானதாக கருதக்கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
கேரளா ஆர்வலர் ரெஹானா பாத்திமா, தனது குழந்தைகள் தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்த சர்ச்சைக்குரிய வீடியோ தொடர்பான வழக்கை, கேரள உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஜூன் 2020ம் ஆண்டு ரெஹானா பாத்திமா என்ற பெண்ணின் அரைநிர்வாண உடலில் அவரது குழந்தைகள் ஓவியம் வரைந்துள்ளனர்.
இதுகுறித்து, வெளியான வீடியோ சர்ச்சைக்குள்ளாகிய நிலையில், பாத்திமாவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனையடுத்து பாத்திமாவுக்கு சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் அனைத்து வாதங்களையும் கேட்ட கேரள உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிமன்றம் , “ஒரு பெண்ணின் நிர்வாண மேல் உடலை பாலியல் அல்லது ஆபாசமானதாக கருதக்கூடாது” என்று கூறியுள்ளது. மேலும், “ஆண்கள் அரை நிர்வாணமாக இருப்பது சிலசமயங்களில் மட்டுமே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஆனால், பெண்கள் அரை நிர்வாணமாக இருப்பதை மட்டும் நாம் பெரிது படுத்துகிறோம்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.