புதுச்சேரி மக்களே கவனம்…வெயில் அதிகரிக்கும்…மழை கொளுத்தும்…வானிலை மையம் எச்சரிக்கை.!!
புதுச்சேரியில் பல பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் வறண்ட வானிலேயே நிலவியுள்ளது. இந்த நிலையில், இன்று மற்றும் நாளை (5.6.2023) ஆகிய நாட்களில் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதைப்போலவே, புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை (5.6.2023) ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும், ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 -4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படியுங்களேன்- இன்று இரவு வரை இந்த 20 மாவட்டங்களில் மழை பெய்யும்…வானிலை மையம் அலர்ட்.!!
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.