மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு.. மனைவியை பார்க்க அனுமதி!

Manish Sisodia

மதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.  இருப்பினும், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள மனைவியை பார்க்க மணீஷ் சிசோடியாவுக்கு நீதிமன்றம் ஒருநாள் அனுமதி அளித்துள்ளது. மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக மணீஷ் சிசோடியா மீது குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த 2 மாதங்களுக்கு முன் 8 மணி நேர விசாரணைக்கு பிறகு இவரை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து ஜாமீன் கேட்டு இவர் மனு அளித்திருந்தார். ஆனால், மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மணீஷ் சிசோடியா சாட்சியங்களை கலைக்கக்கூடும் என்பதால் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.

இந்த சமயத்தில், மணீஷ் சிசோடியாவின் மனைவிக்கு உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், இடைக்கால ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார். இந்த நிலையில், சிசோடியாவின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்து, உடல்நல பாதிக்கப்பட்டுள்ள மனைவியை சந்திக்க ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்