தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடல் – ஒரு வாரத்தில் வெளியாகிறது அறிவிப்பு!
தமிழ்நாட்டில் மூடப்பட உள்ள 500 டாஸ்மாக் கடைகள் குறித்த விவரம் ஒரு வாரத்தில் வெளியாகும் என அறிவிப்பு.
தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மூடப்பட உள்ள 500 டாஸ்மாக் மதுபான கடைகள் எவை என்பது குறித்த பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5329 டாஸ்மாக் மதுபான கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மூடப்பட உள்ள 500 டாஸ்மாக் மதுபான கடைகள் எவை என்பது குறித்த அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மேலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்டார்.