‘மன் கி பாத்’ நிகழ்ச்சியை செய்ய நான் விரும்பவில்லை..! அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு..!
“மன் கி பாத்” செய்ய நான் விரும்பவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பியுமான ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்களை சந்தித்து உரையாற்றி வருகிறார். அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற புலம்பெயர்ந்த இந்தியர்களுடனான கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “மன் கி பாத்” செய்ய நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, அவர்களுடன் (பாஜக) “மன் கி பாத்” செய்ய நான் விரும்பவில்லை என்றும் நான் நம்புவதைச் சொல்ல எனக்கு விருப்பமில்லை எனவும் ராகுல் காந்தி கூறினார். மேலும், ஒடிசா ரயில் விபத்து குறித்தும் பதிலத்த ராகுல் காந்தி, அவர்களிடம் (பாஜக) எதையாவது கேட்டால் அதனை பார்த்துவிட்டு பழியை நம் மீது சுமத்தி விடுவார்கள் என்று கூறியுள்ளார்.