ஒடிசா ரயில் விபத்து.! பணியில் இருந்த 4 அதிகாரிகளிடம் விசாரணை.!
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 4 அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பஹானகா ரயில் நிலைய பகுதியில் சென்னை – கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதிக்கொண்ட கோர விபத்தில் இதுவரை 277 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த விபத்து குறித்து ஒடிசா அரசு தெரிவிக்கையில், விபத்தில் சிக்கியதில் 900 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் என்றும், 260 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இன்னும் 150 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் இருக்கிறது என்றும், அதனால் ரயிலில் பயணித்தோர் பற்றி உறவினர்கள் யாரும் எங்கும் அலைய வேண்டாம் என்றும், பாலசோர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அனைத்து விவரங்களும் இருக்கிறது என்று அரசு தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக, பஹானகா ரயில் நிலையத்தில் 4 ரயில்வே அதிகாரிகள் உட்பட ரயில்வே ஊழியர்களிடமும், அப்போது பணியில் இருந்த உதவி ஸ்டேஷன் மாஸ்டரிடமும் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.