நவீன இந்தியாவின் மைய சிற்பி என்ஆர்ஐ தான்… அமெரிக்காவில் ராகுல் காந்தி உரை.!
நவீன இந்தியாவின் மைய சிற்பி நீங்கள் (என்ஆர்ஐ) தான் என அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களிடம் ராகுல் காந்தி உரையாற்றினார்.
காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பி யுமான ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு கல்வி பயிலும், வசிக்கும் இந்தியர்களிடம் சந்தித்து உரையாற்றி வருகிறார். அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற இந்தியர்களுடனான கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி நவீன இந்தியாவை உருவாக்கும் முக்கியமான சிற்பி என்ஆர்ஐ ஆகிய நீங்கள் தான் என பேசினார்.
அந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது, நவீன இந்தியாவின் மைய சிற்பி வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களாகிய நீங்கள் தான். குறிப்பாக மகாத்மா காந்தி ஒரு என்ஆர்ஐ. சுதந்திர இயக்கத்தில் இருந்த எங்கள் தலைவர்கள் அனைவரும் கூட என்ஆர்ஐ தான். எனது பெரியப்பா நேரு, அம்பேத்கர், சர்தார் படேல், சுபாஷ் சந்திரபோஸ் என அனைவரும் என்ஆர்ஐக்கள் தான். அவர்கள் உலகத்தை பரந்த மனப்பான்மையுடன் நோக்கினார்கள் என ராகுல் மேலும் கூறினார்.