மிக பெரிய ரயில் விபத்தை தடுத்த தமிழக ரயில்வேத்துறையினர்.! கழட்டிவிடப்பட்ட ‘விரிசல்’ பெட்டி.!

Kollam Railway

கொல்லம் ரயிலில் ஒரு பெட்டியில் விரிசல் இருப்பது கண்டறியப்பட்டு அந்த ஒரு ரயில் பெட்டி மட்டும் செங்கோட்டையில் கழட்டிவிடப்பட்டது. 

நேற்று கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில் பெட்டியில் விரிசல் இருபப்தை தமிழக ரயில்வே அதிகாரிகள் கண்டுபிடித்து மிக பெரிய ரயில் விபத்தை தொடுத்துள்ளனர்.

கொல்லத்தில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வருகையில், ஒரு ரயில் பெட்டியில் விரிசல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து, அந்த ரயில் பெட்டி அங்கு கழட்டிவிடப்பட்டு, மதுரையில் புதிய ரயில் பெட்டி இணைக்கப்பட்ட்டது. இதனால் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

முன்னதாக ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட கோர ரயில் விபத்து காரணமாக 270க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவமே மக்கள் மனதில் தீரா சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் சற்று அதிர்ச்சியையும், சிறு நிம்மதி பெருமூச்சையும் கொடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்